Home இலங்கைசாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி!

by admin

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின்பிறப்பாக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை (27.07.24) வைத்தியசாலையை சென்றடைந்தது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி இல்லாததன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலைமை இருந்து வந்தது.

இந்நிலையில் 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின்பிறப்பாக்கி வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த மின்பிறப்பாக்கி பயன்பாட்டிற்கு வரும் எனவும் அதுவரை தற்போதைய தற்காலிக மின்பிறப்பாக்கி பயன்பாட்டில் இருக்கும் எனவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More