விஜயதாச ராஜபக்ஸ நீதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (29.07.24) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடவில்லை எனவும், வேறு ஒரு கூட்டணியில் இருந்து தான் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.
தனது இராஜினாமா குறித்து மேலும் கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ஸ,
அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட எவரும் இதுவரை முன்வரவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி தன்னிடம் கருத்துக் கேட்பார் என நினைத்ததாகவும், அதனால் தான் இந்த அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பதவியை தான் ஏற்றுக்கொள்வதும், பதவி விலகுவதும், ராஜினாமா செய்வதும் தனக்குச் சாதாரணமானது எனவும் தெரிவித்துள்ளார்.