Home இலங்கைஅளவெட்டி குழந்தை மரணம் – சித்திரவதைக்கு உள்ளாக்கியதை ஒப்புவித்த தாய்!

அளவெட்டி குழந்தை மரணம் – சித்திரவதைக்கு உள்ளாக்கியதை ஒப்புவித்த தாய்!

by admin

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (03.08.24)  தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதாக அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்த நிலையில், அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , கைகள், கால்களின் எலும்புகளில் முறிவுகள, தலையில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள, கண்டல் காயங்கள், உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என அறிக்கையிடப்பட்டது.

அதனை அடுத்து குழந்தையின் தாயாரை கைது செய்த பொலிஸார் தாயாரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்

அதன்போது , குழந்தை பால் குடிக்க மறுத்தமையால் கைகள் கால்களை திருகியதாகவும் , தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால, தலையை சுவரில் மோதியதாகவும் குழந்தையின் கால்களை தான் ஏறி மிதித்தாகவும், காதுக்குள் பிரம்பை விட்டு குத்தியதாகவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின்பின்னர் தாயாரை காவற்துறையினர்  நீதிமன்றில் முற்படுத்தியவேளை தாயை 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று, தாயை மனநல மருத்துவரிடம் முற்படுத்தி, மருத்துவ அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More