104
யாழ்ப்பாணத்தில் பன்றியின் தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண்ணொருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த நாகமுத்து இலட்சுமி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
வயோதிப பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவர் பன்றிகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வயோதிப பெண் தனது வீட்டிற்கு அருகில் நின்றிருந்த வேளை அயல் வீட்டில் வளர்த்த பன்றி அவரை தாக்கி , கடித்து குதறியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love