Home இலங்கைவெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

by admin

இந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் மாத்திரம் 28,003 பேர் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 175,163  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன், குறித்த 07 மாத காலப்பகுதியில் அவர்களிடம் இருந்து 3,710.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1,71,864 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளதுடன், அந்த காலகட்டத்தில் 3,363.6 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளன.

இந்த நிலையில், இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற ஆண்டாக 2014ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதுடன், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, அந்த ஆண்டில் 300,703 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More