1.4K
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக மைதா
நெல்லியடியில் உள்ள மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
குறித்த மைதானத்தில் எதிர்வரும் வாரம் எதிர்க்கட்சித் தலைவரின் பிரச்சார கூட்டத்தினை நடாத்த ஒருவர் மைதானத்தினை கேட்டுள்ளார்.
மைதான நிர்வாகத்தினர் , தமக்கு அன்றைய தினம் வேறு நிகழ்வுகள் இருப்பதனால் மைதானம் தர முடியாது என மறுத்துள்ளனர். அதனால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவரின் பிரச்சாரத்திற்கு மைதானம் கேட்டவர் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையத்து ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவரின் கவனத்திற்கு மைதான நிர்வாகம் இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.
அதனை அடுத்து ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானம் பெற்றவர் , எதிர்க்கட்சித் தலைவரின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவருடன் முரண்பட்டுக் கொண்ட நிலையில், ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானம் பெற்றவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை முரண்பட்டு கொண்ட இருவரும் பிரபல வர்த்தகர்கள் என்பதுடன் , சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love