205
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தும்பளை மேற்கை சேர்ந்த பிரேமலா கேசவதாஸ் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட போது , வீதியால் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்தவரை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மீண்டும் போதனா வைத்தியசாலையில் இருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
Spread the love