137
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இளைஞனை கடத்தி சென்று , தாக்கி இளைஞனிடம் இருந்து 10ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிச் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞனை முச்சக்கர வண்டி ஒன்றில் மூவர் கடத்தி சென்று தாக்குதல் நடாத்தி பணம் மற்றும் வெள்ளி சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
அதேவேளை தலைமறைவாகியுள்ள ஏனைய இருவரையும் கைது செய்வதற்கு கோப்பாய் காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்
Spread the love