133
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி தாஜூடீன் கொலை செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்த சந்தர்ப்பத்தில் இதனை ஓர் வாகன விபத்தாகவே காவல்துறையினர் சித்தரித்து வழக்கு விசாரணைகளை முடிவுறுத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் ஓர் படுகொலை என தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love