Home இலங்கைகனடாவிலிருந்து  . காணி வாங்க வந்தவரின்  பணத்துடன் தலைமறைவான தரகர்

கனடாவிலிருந்து  . காணி வாங்க வந்தவரின்  பணத்துடன் தலைமறைவான தரகர்

by admin

 

கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக  வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம்  சென்றுள்ளார்.

அவருக்கு குறித்த காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே காணியை அடையாளம் காட்டி , காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார்.
அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இலட்ச ரூபாய் பணத்தினை ரொக்கமாக தயார் செய்திருந்தார். அந்த பணத்தினை கனடா வாசி தன்னுடன் வைத்திருந்தார். அவர் அசந்த நேரம் பார்த்து , காணி தரகர் 85 இலட்ச ரூபாய் பணத்தினை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More