108
யாழ்ப்பாணத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நவாலி பகுதியில் வசிக்கும் காவல்துறை உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த 12ஆம் திகதி உட்புகுந்த திருடர்கள் ஆறரை பவுண் நகை மற்றும் 29ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love