இந்தியாவின் உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கவுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் சட்டசபைக்கு கடந்த 15-ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகின்ற நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற 4-ஆவது சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படாமல் நடத்தப்பட்ட தேர்தல்களில் இந்த மாநிலமும் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மணிப்பூரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற கொள்கையுடன் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட ஐரோம் ஷர்மிளா தோல்வியடைந்துள்ளார்.