Home இலங்கைகனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி

கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி

by admin

அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார்.

குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு  காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More