Home இலங்கைகேரதீவு – சங்குப்பிட்டிப் பாலம் பூட்டு

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலம் பூட்டு

by admin
யாழில் இருந்து பூநகரி செல்லும் கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு / சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியிலிருந்து  எதிர் வரும் 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்துள்ளார்கள்.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் பயணித்து சில இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், மேலும் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அறியத்தந்துள்ளார்.
மேலும், கனகர வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்திற்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More