182
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – கைதடி வீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்ட வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love