குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்னமும் கையொப்பமிடவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் கையொப்பமிட்டு அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை சபாநாயகர் வழங்கியதாக அண்மையில் ஊடக அமைச்சர் கூறியிருந்தார்.
எனினும் இந்தக் கூற்றில் உண்மையில்லை என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தாம் இது குறித்த விபரங்களை திரட்டியதாகவும் அப்போது ஆவணத்தில் கையொப்பமிடவில்லை என்பது நிரூபணமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி இந்த சட்டம் பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.