Home உலகம் இஸ்ரேல் பிரதமர் –   முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு பிடியாணை

இஸ்ரேல் பிரதமர் –   முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு பிடியாணை

by admin

 

காசாவில் இஸ்ரேல் ஹமாஸ்  அமைபபுக்கிடையே போர் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகின்ற நிலையில்  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும்  முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்  ஆகியோருக்கெதிராக  பிடியாணை பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசாவில் நடைபெறும் இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர் குற்றங்கள் நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று  வந்த நிலையிலேயே இந்த பிடியாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது

போாில் உயிாிழந்த பலஸ்தீன மக்கள்  தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்களை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம், போர் தொடர்பாக இஸ்ரேல் அரசின் அறிக்கைகளையும் நிராகரித்துள்ளது. மேலும், மருத்துவ உதவிகளைப் புறக்கணித்து, குழந்தைகள் உட்பட பல உயிரிழப்புகளை இஸ்ரேல் ஏற்படுத்தியமைக்கு சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த இரு இஸ்ரேல் தலைவர்கள் மட்டுமின்றி ஹமாஸ் இயக்கத் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரிக்கும் பிடிணாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More