Home இலங்கைமழை காரணமாக யாழில். 2 ஆயிரத்து 294 பேர் பாதிப்பு – 20 வீடுகள் சேதம்

மழை காரணமாக யாழில். 2 ஆயிரத்து 294 பேர் பாதிப்பு – 20 வீடுகள் சேதம்

by admin
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக 610 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.  யாழ் . மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் பதிவாகிய பாதிப்புக்களே அவை என மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை , யாழ் . மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இனம் கண்டு , அவற்றை அடையாளப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் , இடர்நிலை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளோருக்கு சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட செயலர் ம. பிரதீபனால் பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More