Home இலங்கைமாங்குள மோட்டார் சைக்கிள் விபத்து – உயிரிழப்பு மூன்றாக அதிகரிப்பு!

மாங்குள மோட்டார் சைக்கிள் விபத்து – உயிரிழப்பு மூன்றாக அதிகரிப்பு!

by admin

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மரியதாஸ் யுவன் கீர்த்தி (வயது 36) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி மாங்குளம் பகுதியில் இருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் , மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், வன்னிவிளாங்குளம் ஐந்தாவது மைல் கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்திருந்தனர். மேலுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More