Home இலங்கையாழில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

யாழில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

by admin

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட செயலர் ம, பிரதீபன் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் மழைக்குப் பின்னரான சூழலில் டெங்குப் பரவலை மிக அதிகமாக காணப்படுகிறது.

அதனால் மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பொருத்தமான பொறிமுறையூடாக நுளம்பு பெருகாது தடுப்பதற்கான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக காணிகளில் காணப்படும் வெற்றுக்கலன்களை சேகரித்து உரிய வகையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல பிரதேச செயலாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இச் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்ற அறிக்கையினை 2024.12.16 ஆம் திகதி அனுப்பி வைக்குமாறும் பிரதேச செயலர்களை மாவட்ட செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More