Home இலங்கை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1.1 மில்லியன் ரூபாயை மோசடி செய்தவர் கைது!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1.1 மில்லியன் ரூபாயை மோசடி செய்தவர் கைது!

by admin

பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பணம் பெற்றுள்ளார்.

அந்த வகையில் 16 பேரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேரும் வவுனியா காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More