குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உபுல் ஜசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில தரப்பினர் சில முதலீட்டுத் திட்டங்களை அமுல்படுத்திக் கொள்ள இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக கடமையாற்றிய காலத்தை விடவும் தற்போது உயிர் அச்சுறுத்தல் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வழிகளில் அழுத்தங்கள் பிரயோகிக்;கப்பட்டு வருவதாகவும் தாம் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.