அவுஸ்திரேலியாவில் அவரது பிள்ளைகளின் முன்னால் , மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடா்பான விபரங்கள் நேற்றையதினம் விக்டோரியா மாநில உயர் நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்ட நிலையில் 30 வருடங்களுக்குப் பின்னரே தினுஷ் குரேராவுக்கான மன்னிப்பு குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி அமண்டா ஃபாக்ஸ் கூறியுள்ளார்.
சுமார் 2வருடங்களுக்கு முன்பு, குரேரா தனது மனைவியும் மூன்று பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய நெலோமி பெரேராவை கோடரியால் தாக்கி கொலை செய்திருந்தார். நெலோமி , கணவரை பிரிந்து செல்ல தயாராகி இருந்ததாகவும் நீதிமன்றத்திற்கு தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது