36
இந்தியாவின் மும்பைக் கடற்கரைப் பகுதியில் சுற்றுலா படகு மீது கடற்படையின் அதிவேக ரோந்து படகு மோதியதில் 3 கடற்படை வீரர்கள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று(18) மாலை இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான எலிபன்ரானா குகையை ( elephanta caves ) நோக்கி சென்ற படகில் சென்றவர்களே இவ்வாறு விபத்தினை எதிர்கொண்டுள்ளனர். அதிவேக ரோந்து படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடக்கத்தது
Spread the love