ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை (23.12.24) பெற்றுக்கொண்டார்.
அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, அவருக்கு கட்சி உறுப்புரிமை வழங்கி, சர்வஜன சக்தி கட்சியின் தலைமைத்துவ சபைக்கு நியமித்தார்.
எஸ். எம். சந்திரசேன, 2001 முதல் 2024 வரை அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியில் இணைந்துகொண்டார்.