கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 2016.01.01 இருந்து 2016.06.30 வரையான ஆறுமாத காலப்பகுதியில் 231 வழக்குகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது அத்துடன் இவற்றில் 226 வழக்குகளின் தண்டப்பணமாக 1416600 ரூபா அறவிடப்பட்டுள்ளது என மதுவரித் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
குறித்த வழக்குகள் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கைது செய்யப்பட்ட மூன்றுபேரும் ,கசிப்பினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 53 பேரும் ,கோடாவினை வைத்திருந்த ஒருவரும் ,கசிப்பு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும், அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம் விற்ற குற்றச்சாட்டில் 5 பேரும், அனுமதிப்பத்திரம் இன்றி கள் விற்ற குற்றச்சாட்டில் 91 பேரும், அளவுக்கு மீறிய கள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 35 பேரும், கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும், இருபத்தொரு வயதிற்கு குறைந்தவர்களிற்கு சிகரட் விற்ற குற்றச் சாட்டில் 41 பேருமாக மொத்தமாக 231 பேர் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டது இவற்றில் 226 வழக்குகளின் தண்டப்பணமாக 1416600 ரூபா நீதிமன்றங்களால் அறவிடப்பட்டுள்ளது என மதுவரித் திணைக்கள புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.