643
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவிப்பதற்காக, பெப்ரவரி 14 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் முன்னதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

