277
உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டின் பிரதான அமர்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உரையாற்ற உள்ளார். அங்கு அவர் பொருளாதார வளர்ச்சி, புதுமை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த இலங்கையின் தொலைநோக்கு பார்வையை கோடிட்டுக் காட்டுவார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிலைபேறான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அவரது உரை எடுத்துக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் மூன்றாவது நாள் இன்று (12/2/2025) ஆகும்.
Spread the love

