Home இலங்கைமண்ணுரிமைக்கான மக்கள் போராட்டமானது தையிட்டியில் இன்றும் தொடர்கிறது

மண்ணுரிமைக்கான மக்கள் போராட்டமானது தையிட்டியில் இன்றும் தொடர்கிறது

by editorenglish

மக்களின் நிலத்தை அபகரித்துத் தையிட்டியில் சட்டவிரோதமாக‌ விகாரை கட்டுவதை உடனடியாக நிறுத்த‌ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டகாணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை (11/2/2025) பி.ப 4.00 மணிக்குத் தொடங்கிய‌  கவனயீர்ப்புப் போராட்டமானது பௌர்ணமி தினமாகிய இன்று (12/2/2025) புதன்கிழமை இரண்டாவது நாளாக   தொடர்கின்றது.

காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஆதரவாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். ”பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழி விடு”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவான  காவல்துறையினா் குவிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More