447
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து மற்றொரு கடவுச் சீட்டின் மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளை இந்தியாவின் கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழக காவற்துறையினரால் கடந்த திங்கட்கிழமை (10.02.25) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Spread the love

