பாகிஸ்தானில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் அதிகரித்து வருகின்றதாக தெமரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில் மாதந்தோறும் சுமார் 100 சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இடம்பெறுவதாகவும் இதற்காக ஒருவருக்கு ஐம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் டொலர்கள் வழங்கப்படுவதாகவும் பாகிஸ்தான் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்தவருடம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் மிக மோசமான நிலையில் காணப்பட்ட சட்டவிரோத சிறுநீரகத் மாற்றுசிகிச்சை நிலையம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அங்கு மேற்கொண்ட விசாரணைகளின் போது வேலை வழங்குவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இருபத்தைந்து பேர் சிறுநீரகங்களை எடுக்கும் நோக்கில் பலவந்தமாக சிறைவைக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.