ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை இன சமூகப் பிரச்சினைகள் தொடர்பான விசேட பிரதிநிதி ரீடா இசாக்கின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு பயணம்; செய்திருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி ரீடா இசாக், அறிக்கை ஒன்றையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்திருந்தார்.
இந்த அறிக்கை உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பொறிமுறைமைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை அறிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.