தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ. 245 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்சநீதிமன்றத்தில் (27/02/2025) தெரிவித்தார்.
தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகள் எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடந்த விசாரணையின் போது இது குறித்த இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பான 12 மனுக்களை அமர்வு பரிசீலித்து வந்தது. தாக்குதல்களைத் தடுப்பதில் சில அதிகாரிகளின் செயலற்ற தன்மைக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தப் பணத்தொகை இழப்பீடாகச் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

