Home இலங்கைவாகரை வாணன் : இந்த இயல்பு கொண்ட மனிதர் பெருகி வருக.

வாகரை வாணன் : இந்த இயல்பு கொண்ட மனிதர் பெருகி வருக.

பேராசிரியர் சி. ஜெயசங்கர்

by admin

 

வாகரை வாணன் அவர்கள் தமிழ் அறிவும் தமிழ் உணர்வும் மீதுரப்பெற்ற பெரும் ஆளுமை. தோற்றத்தில் எளிமையும், அறிவில் ஆழமும் செயற்பாட்டில் இடையறா உக்கிரமும் கொண்ட, ஒருபொழுதும் தளராத நெஞ்சம் உணர்வும் கொண்ட அறிவாளன்.

தமிழ் வித்துவாணன் வாகரை வாணன் அவர்கள் ஆங்கிலம், இலத்தின் மொழிகளில் புலமை கொண்டவர். தழிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை ஆக்கிருப்பவர்.

தமிழர் தேசியச் சிந்தனையின் ஓயாத செயற்பாட்டாளர், ஒரு பொழுதும் தடம்மாறத சமூகப் பண்பாட்டு அரசியல் பயணம் அவருடையது. தமிழர் தேசிய சிந்தனையினதும் செயற்பாட்டினதும் அறிவு களஞ்சியமாகவும், சாட்சியாகவும் இருப்பவர்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”; என்பதே அவரது வாழ்வின் தத்தும்.

இப்படியான பல மனிதர்களது வாழ்வும் போராட்டமும் ஈழத்தழிழர்களது சமூக அரசியல் சூழலில் குறிப்பாக தமிழ் தேசிய அரசியல் சூழலில் அவசிய அவசியமாக அறியப்பட வேண்டியது.

இந்தவகையில் வாகரை வாணன் அவர்களது மிக அண்மையில் வெளிவந்திருக்கும் நூல்தான் “எண்ணங்கள் ஆயிரம்”. அவரது ஜம்பத்தேழு ஆண்டுகால எழுத்துப் பணியில் வெளிவந்திருக்கும் நாற்பத்தி மூன்றாவது நூலாக மேற்படி நூல் அமைகின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆக்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும், கட்டுரைகளையும் எழுதிவரும் வாகரை வாணன் அவர்கள் பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களையும் அதிக கவனத்தில் கொண்டவராக இருக்கின்றார்.

 

  1. சுட்ட பொன் (கவிதைகள்) 1970
  2. எண்ணத்தில் நீந்துகிறேன் (கவிதைகள்) 1971
  3. பயணம் (கவிதைகள்) 1972
  4. துரோணர் சபதம் (நாடகம்) 1972
  5. தமிழ்ப்பாவை 1980
  6. கடற்கரைப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு) 1983
  7. ஊரடவரசந யனெ ஊiஎடைணையவழைn (ஆங்கிலக் கட்டுரை) 1989
  8. இனிக்கும் தமிழ் (கட்டுரை) 1989
  9. கிறிஸ்து தத்துவம் 1991
  10. சின்னச் சின்னக் கதைகள் 1991
  11. ஆசிரியன் ஓர் அட்சயப்பாத்திரம் (புதுக்கவிதைகள்) 1992
  12. அருளாளர் அந்தோனியார் (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993
  13. ஒரு பூ மலர்கிறது (நாடகம்) 1993
  14. பாலர் தமிழ்ப்பாட்டு (சிறுவர் இலக்கியம்) (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993
  15. கிறிஸ்து காவியம் 1995
  16. சின்னச் சின்னப் பூக்கள் (சிறுவர் இலக்கியம் – இலங்கை அரசின் இலக்கியப்பரிசு பெற்றது.) 1997
  17. சமயம் – சில சிந்தனைகள் (கட்டுரைகள்) 1997
  18. சிறு கதை விமர்சனம் 1997
  19. அரசி உலக நாச்சியார் (சிறுகதைத் தொகுப்பு) 1998
  20. புதுக்கவிதைப் புத்தகம் (புதுக்கவிதைகள்) 1998
  21. விசுவாசத்தின் புதிய விடியல் (தமிழ் மொழி பெயர்ப்பு) 1998
  22. தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள் 1999
  23. இன்ரநெற் தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) 1999
  24. ஆல ஊழரவெசல (ஆங்கிலக் கவிதை) 2000
  25. நீ வா நிலாவே (சிறுவர் இலக்கியம்) 2000
  26. சின்னஞ் சிறு கிளியே (சிறுவர் இலக்கியம்) 2000
  27. ஆய் தமிழ் (ஆய்வுக்கட்டுரைகள்) 2001
  28. வாகரை ஒரு வரலாற்றுப்பார்வை (வரலாறு) 2003
  29. நந்திக்கொடி (வரலாற்றுக் குறு நாவல்) 2004
  30. பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் 2005
  31. இன்னாசியார் காவியம் 2005
  32. பனிச்சங்கேணி அரசி (வரலாற்றுச் சிறுகதைகள்) 2007
  33. கிழக்கிலங்கைத் தமிழகம் (வரலாறு) 2011
  34. மட்டக்களப்புக் காவியம் 2016
  35. வாகரை வாணனின் ஆய்வுக் கட்டுரைகள் 2017
  36. உரைநடை மற்றும் கவிதை 2017
  37. தமிழ்ப் பாவை தைப்பாவை 2017
  38. தமிழ் மண் மட்டக்களப்பு. 2019
  39. தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ் 2021
  40. சோளன்சேனையும் சேலைக்கிளிகளும் 2023
  41. எண்ணங்கள் ஆயிரம் (கட்டுரை) 2024
  42. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம் (மொழிபெயர்ப்பு)
  43. அன்பினால் மலர்ந்த பூ

(வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா-தமிழாக்கம்)

நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலத்திற்குமான சமூகப் பண்பாட்டு அரசியல் அறிவும் உணர்வும் கொண்ட சமூகங்களது உருவாக்கம்  பற்றிய அடங்காத வெம்மையாக அவரது எழுத்தியக்கம் இருந்து வருகின்றது.

உலகத்தறிவும், தேசத்துத் தொல்லறிவும், உள்;ர் நுண்ணறிவும் கொண்ட சமூகங்களது உருவாக்கமும் அவரது நோக்கமாக இருந்து வருவதன் சாட்சியாக அவரது நூல்கள் திகழ்கின்றன.

களச்செயற்பாடுகளுக்கு முதன்மை கொடுத்து இயங்கிய, இயங்கிவரும் தலைமுறையின் இந்த எழுத்துக்கள் முழுநேர எழுத்தாளர்களது என்று எண்ணவைக்கும் வியப்பிற்குரியவை. இந்த தலைமுறைகளின் செயல்மைய அறிவெழுச்சியை உள்வாங்கிய ஆளுமைகளின் உருவாக்கங்கள் மாற்றங்களைச் சாத்தியமாக்கும்.

பேராசிரியர் சி. ஜெயசங்கர்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More