340
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தந்தை ஓட்டிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு , சிறுவன் ஒருவா் உயிரிழந்துள்ளாா், உடுவில் பகுதியை சேர்ந்த சுன்னாகம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளாா்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை தந்தை பின் நோக்கி செலுத்தும் போது , பின் புறமாக நின்ற சிறுவனின் மீது உழவு இயந்திரம் ஏறியதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாக ம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love

