Home இலங்கைபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜீவன்

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜீவன்

by editorenglish

ஹட்டன் செனன் தோடத்தில் தீ விபத்துக்குள்ளான குடியிருப்புக்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரவிலே சென்று பார்வையிட்டுத் தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஹட்டன் செனன் தோட்டம், கே.எம். பிரிவு தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு (03/02/2025) தீப்பரவ‌ல் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற இ.தொ.கா பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உடனடியாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கான தங்குமிட வசதி, அத்தியாவசிய தேவைகள் உட்பட உலர் உணவுப் பொருட்கள் அனைத்தையும் வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

எனவே இது தொடர்பில் குறித்த தோட்டப்பகுதிக்கான பெருந்தோட்ட யாக்கத்திடம் பேசி அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தோட்ட நிர்வாகத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்தினால் 24 வீடுகள் முற்றாக எரிந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், தீ விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லையெனவும் மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More