Home இலங்கைகுற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை பொதுப்பணிகளிலிருந்து இடைநிறுத்துமாறு கோரிக்கை

குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை பொதுப்பணிகளிலிருந்து இடைநிறுத்துமாறு கோரிக்கை

by admin

சித்திரவதை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், விசாரணை ஆணைக்குழுக்களாலும், ஐ.நா அறிக்கைகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை பொதுப்பணிகளிலிருந்து இடைநிறுத்துமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால்  நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான  காலப்பகுதியில்  வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய வேளை   ஜோசப் முகாம் எனும் சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்தவரும் தற்போது பிரேஸிலுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றி வருபவருமான  ஜகத் ஜயசூரிய  மற்றும் 4ஆம் மாடியில் சித்திரவதைப் பிரிவிற்கு இயக்குனராக இருந்தவரும் தற்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் இருக்கும்  சிசிர மென்டிஸ் ஆகியோரையே  இடைநிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும்   சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்துக்கு  நிறைவேற்றுப் பணிப்பாளராக  யாஸ்மீன் சூகா  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More