யாழ்ப்பாணத்தில் நான்கு வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் மூவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதகல் பகுதியில் போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்று , கூரிய ஆயுதங்களுடன் வீடொன்றில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை இளவாலை காவற்துறையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
அதன் போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு வாள்கள் மீட்கப்பட்டன. தொடர் தேடுதலின் போது, பிறிதொரு இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டன.
அதனை அடுத்து வீட்டில் இருந்த மூன்று இளைஞர்களையும் காவற்துறையினர் கைது செய்து இளவாலை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

