Home இலங்கைகாயமடைந்தவர்களை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்!

காயமடைந்தவர்களை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்!

by admin

கொத்மலை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரிணி அமர சூரிய

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து  விபத்தில் காயமடைந்தவர்களை ஞாயிற்றுக்கிழமை (11.05.25) அன்று இரவு பிரதமர் கலாநிதி  ஹரிணி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு  நேரில் சென்றுபார்வையிட்டார்.

இதன் போதுஅங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தை விசாரித்ததோடு வைத்தியசாலையில்  வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்து ஆராய்ந்தார்

இதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் சென்றிருந்தார்.  சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன

இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More