376
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ற் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நெக்ஸ்ற் தொழிற்சாலையின் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமலும் , உதவியற்ற நிலையிலும்இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love

