இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கான விசேட பிரதிநிதி மொனிக்கா பின்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பின்டோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. Latimer House கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்றின் நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.