Home இலங்கைசட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு  – கைதானவர் விளக்கமறியலில்

சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு  – கைதானவர் விளக்கமறியலில்

by admin
யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன் , அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.
இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் போலி உறுதிகளை நிறைவேற்றியதாக சட்டத்தரணியின் புகைப்படத்துடன் போலியான தகவல்களுடன் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம்  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் குறித்த சமூக வலைத்தள கணக்கு உரிமையாளரை 08ஆம் திகதி  காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் ல்லாகம் நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை முற்படுத்திய நிலையில் , அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுருந்தது.   இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் , சந்தேக நபரின் விளக்கமறியலில் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மன்று நீடித்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More