முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளாா். சுகாதார அமைச்சிற்கு பெயரளவு நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக தொிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடா்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலைரயில் குறித்த பணிப்பெண், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (11) அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணையின் பின்னா் செய்யப்பட்டுள்ளாா். கைது செய்யப்பட்ட எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த குறித்த பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாா்.

