Home இலங்கைதையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக வழக்கு

தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக வழக்கு

by admin

 

யாழ்ப்பாணம் , பலாலி  காவல் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பனங்களில் தெரிவித்துள்ளனர்.   நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி  காவல்துறையினா் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது , போராட்டம் நடத்தியவர் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா , நா.காண்டீபன் ஆகியோர் சமர்ப்பனங்களை முன்வைத்தனர். குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நடைபெறவிருந்த வேளை சிலரின் பெயர் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவுகளை பெற்று இருந்தனர். நீதிமன்றினால் பெறப்பட்ட தடையுத்தரவை , சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காது, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , அங்கு வந்த பொலிஸார் அவர்களின் பெயர் விபரங்களை வாசித்து சென்று இருந்தனர். அதனூடாக சட்டத்தின் ஏற்பாடுகளை திருப்தி படுத்தியுள்ளதாக காவல்துறை தரப்பு கூற முடியாது என மன்றில் தெரிவித்திருந்தோம்.
அதேவேளை, தையிட்டி விகாரைக்கு பொறுப்பான “அமரபுர நிக்காய பீடம்”  விகாரையில் பொசன் நிகழ்வுகளை நடாத்துவது இல்லை என கடந்த மே மாதம் 29ஆம் திகதியே பதில்  காவல்துறை  மா அதிபர் , வடமாகாண மூத்த  காவல்துறை  அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் பூரணை தின வழிபாட்டிற்கு வருகை தந்த பௌத்தர்களை போராட்டக்காரர்கள் இடை மறித்ததாகவும் , தமிழர்கள் விகாரையை இடித்து அழிக்க போகின்றார்கள் , பௌத்தர்கள் ஒன்றிணைந்து தையிட்டிக்கு செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கடும் போக்கு சிங்கள இனவாதிகள் பொய்யான தகவல்களை பரப்பி , இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்று விக்க முயன்றனர். அவர்கள் தொடர்பில் காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற விடயத்தை மன்றில் சுட்டிக்காட்டி , அதற்கான ஆதாரங்களையும் மன்றில் சமர்ப்பித்துள்ளோம்.
பலாலி  காவல்துறை   அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்கி மன்றை தவறாக வழி நடத்துகிறார். என்ற விடயத்தையும் மன்றில் சுட்டிக்காட்டினோம். அதனை அடுத்து குறித்த வழக்கினை நீதவான் கிடப்பில் போட்டுள்ளார் என தெரிவித்தனர்
அதேவேளை தையிட்டி விகாரையை தமிழர்கள் இடித்து அழிக்க போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட பொதுபலசேன ராவண பலய , சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தையிட்டி விகாரைக்கு வந்திருந்தார்கள் என்றும் , அவர்களுக்கு பலாலி காவல்துறையினர்  பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More