Home இலங்கைபொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற முற்பணம் வழங்கிய வியாபரிகள் கவலை!

பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற முற்பணம் வழங்கிய வியாபரிகள் கவலை!

by admin

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக் கொள்வதற்காக முற்பணத்தை வழங்கிய போதும் இதுவரை எமது வியாபார நடவடிக்கை ஆரம்பிக்க முடியவில்லை என கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை இன்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் , இராமலிங்கம் சந்திரசேகரர் , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள் ஆகியோர் உள்ளிட்ட குழு நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கடைகளைப்பெற்றுக் கொண்ட வியாபாரிகள் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

கடைக்கான முற்பணத்தை வழங்கியபோதும் இதுவரை வியாபார நடவடிக்கை நடைபெறவில்லை என்பதையும், அங்கு எத்தகைய தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக அந்தப் பகுதியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு தரவேண்டும்.

விவசாயிகளுக்கும் தென்பகுதி வியாபாரிகளும் இதைநோக்கி வருவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொண்டு தரவேண்டும். அத்துடன் எமக்கு சில சலுகைகளை வழங்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர்,

விவசாயிகளுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படவேண்டும், அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக பொருளாதார மத்திய நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அத்துடன் இந்தப் பொருளாதார மத்திய நிலையத் திட்டம் தயாரிக்கப்படும்போது சில பகுதிகளில் சேகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டு அங்கிருந்து பொருளாதார மத்திய நிலையத்துக்கு பொருட்கள் கொண்டு வரப்படவேண்டும் என தெரிவித்தார்.

இந்தப் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய நிர்வாகக் குழுவும் மீளமைக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More