Home இலங்கைவவுனியாவில் நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க தமிழ் பேசும் கட்சிகள் இணக்கம்!

வவுனியாவில் நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க தமிழ் பேசும் கட்சிகள் இணக்கம்!

by admin

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று (15) காலை இடம்பெற்றது.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் பிரநிதிகளுக்கிடையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாக கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில், வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், ஜனநாயக தேசிய கூட்டணிக்கு பிரதி முதல்வர் பதவிவும் முதல் இரண்டு வருடங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த இரு வருடங்களுக்கு குறித்த பதவிகள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழரசுக் கட்சிக்கும், உபதவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More