Home இலங்கைதிடீரென எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக கூடிய மக்கள்

திடீரென எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக கூடிய மக்கள்

by admin

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்  இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை.ஆனாலும் திடீரென மக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் எரிபொருள் இருப்பில் இருக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழமை போன்று எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More