யாழ்ப்பாணத்தில் வீட்டில் உணவருந்திய பின்னர் மயங்கி சரிந்த கந்தர்மடம் பகுதியை சேர்ந்த கேதீஸ்வரன் எனோக்ஹசான் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் நேற்றைய தினம் (17.6.25) உணவருந்திய நிலையில் மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து வீட்டார் இளைஞனை யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இரத்த வாந்தி எடுத்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

