Home இலங்கைகாணிகளை விடுவிக்க கோரி மயிலிட்டியில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம்!

காணிகளை விடுவிக்க கோரி மயிலிட்டியில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம்!

by admin

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் புதன்கிழமை ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More