Home இலங்கைஇரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளன!

இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளன!

by admin

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய  அகழ்வு பணிகளின் போது இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக, 45 நாட்கள் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் , 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் நடைபெற்று , பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More